மக்களை கவர்ந்திழுக்கும் ஐஸ்கிரீம் பானிபூரி! இணையத்தில் வைரல்
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.
மிகவும் காரமாகவும், இனிப்பு சுவையுடனும் பல இடங்களில் இது வெரைட்டியான விற்கப்படுகின்றது.
ஆனால் மதுரையில் ஒரு இடத்தில் குளு குளுவென ஜஸ்கிறீம் பானி பூரி விற்பனை செய்து வருகின்றார்கள். இது மிகவும் பிரபல்யமாகி வருகின்றது.
ஐஸ்கிறீம் பானிபூரி
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாக்லேட் பானி பூரி மற்றும் மில்க் ஷேக் பானி பூரி எனும் வெரைட்டியான பானிபூர்களை விற்பனை செய்து வருகின்றார்.
ஐஸ்கிரீம்களில் இருக்கும் எல்லா பிளேவர்களிலும் இங்கு பானி பூரி கிடைக்கும். இதில் சாக்லேட் ஐஸ்கிரீம் பானி பூரி மற்றும் பால் சர்பத் பானி பூரி ஸ்பெஷல் ஆக உள்ளது.
பானி பூரிகளில் சாக்லேட் பிஸ்கட் மற்றும் சாக்லேட் ஐஸ்கிரீம்களை போட்டு அதன் மேல் சாக்லேட் கிரீமை ஊற்றி தருகின்றார்கள்.
மேலும் இவர்கள் ஸ்பெஷல் ஆக செய்த பால் சர்பத்தை பானிபூரிகளில் ஊற்றி பால் சர்பத் என்ற ஒன்றையும் விற்பனை செய்து வருகின்றார்கள்.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.