இன்ப அதிர்ச்சி கொடுத்த அர்ஜுன்... திடீர் அறிவிப்பால் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்
ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விகுவதாக அறிவித்திருந்த நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன்.
அதிகம் யோசித்து, புரோடக்சன் டீம் அனுமதியுடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன் என்று அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்து இருக்கிறார்.
முடிவை மாற்றிய அர்ஜூன்
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,
கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான போன் கால்கள், போஸ்ட்கள், மெசேஜ்கள், கோரிக்கைகள் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி.
உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.