கடவுளின் குறியீட்டை டாட்டூ போட்ட ஸ்ருதிஹாசன்! எந்த இடத்தில் தெரியுமா?
கமல்ஹாசனின் மகளும். நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடவுளின் சின்னத்தினை டாட்டூவாக போட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களின் கேள்விக்கு எப்போதுமே வெளிப்படையாகவே பதிலளித்து வருகிறார்.
நடிகை ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சமீபத்தில் அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வீர சிம்ம ரெட்டி மற்றும் வால்டேர் வீரய்யா போன்ற படங்கள் வெளியாகி மக்களின் விமர்சனத்தினை பெற்றது.
எப்பொழுது சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் முதுகில் ஸ்ருதி என்ற பெயருடன் அருகில் முருகன் வேல் குறியீட்டை டாட்டூவாக போட்டுள்ளதே காரணமாகும்.