மாட்டு பாலை போன்று பாக்கெட் பாலையும் கொதிக்க வைக்கணுமா?
பொதுவாக நமது வீடுகளில் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கம். அதற்கு பெரும் அளவிலான வீடுகளில் பாக்கெட்டில் கிடைக்கும் பாலை தான் பயன்படுத்துவார்கள்.
அதே போன்று கிராமப்புறங்களில் இருப்பவர்கள் பசுக்களில் இருந்து நேரடியாக கிடைக்கும் பாலை பயன்படுத்துவார்கள்.
இப்படி பயன்படுத்தும் பொழுது பாலை சூடுப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்திருக்கும். ஏனெனில் பச்சை பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அதிகமாக இருக்கும்.
அதனை அழிப்பதற்காகவே பாலை கொதிக்க வைத்து அதன் பின்னர் டீ அல்லது காபிக்கு பயன்படுத்துகிறோம். இந்த பழக்கம் பழங்காலம் முதலாகவே மக்களால் பின்பற்றப்படுகிறது.
மாறாக தற்போது நகர்புறங்களில் பாக்கெட் பால் அதிகமாக கிடைக்கின்றன. அந்த பாலையும் கொதிக்க வைத்து தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
அந்த வகையில், பாக்கெட் பாலை கொதிக்க வைக்கணுமா? என்பதற்கு ஆலோசகர் ஒருவர் கொடுத்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பாக்கெட் பாலை கொதிக்க வைப்பது அவசியமா?
இது தொடர்பில் அவர் கூறுகையில்,“வழக்கமாக நாம் பசுக்களில் இருந்து நேரடியாக எடுக்கும் பாலை சூடுப்படுத்தி, அதன் பின்னர் பயன்பாட்டிற்கு எடுப்போம். ஏனெனின் அந்த பாலில் நமது வயிற்றுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உள்ளன.
ஆனால் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் பாலானது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக “ பேஸ்டுரைசேஷன்” எனப்படும் செயல்முறையை கையாள்கிறார்கள். பேஸ்டுரைசேஷன் செய்யும் பொழுது இரண்டு விதங்களை பின்பற்றுவார்கள்.
1. பாலை உயர் வெப்பநிலையில் குறைவான நேரம் சூடுப்படுத்துவார்கள்.
உதாரணமாக, 72 டிகிரி செல்சியஸில் 15-20 நொடிகள் சூடுபடுத்தி, அதனை குளிர வைத்து பாக்கெட்களில் அடைப்பார்கள்.
2. மிக உயர் வெப்பநிலையில் குறைந்த நேரம் சூடுபடுத்துவார்கள்.
உதாரணமாக, 132 டிகிரி செல்சியஸில் 2 நொடிகள் பாலை கொதிக்க வைப்பார்கள். அதன் பின்னர் பாக்கெட்களில் அடைப்பார்கள்.
மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளில் பாலை களஞ்சியப்படுத்தும் பொழுது பால் கெட்டுப்போகாமல் இருக்கும். ஏனெனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனெல்லா, ஈகோலை போன்ற கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
இதனால் நாம் கடைகளில் வாங்கும் பால் எந்தவித சேதமும் இல்லாமல் வந்தால் அதனை கொதிக்க வைக்காமல் குடிக்கலாம். சில சமயங்களில் நாம் வாங்கும் பால் பாக்கெட்டில் சேதம் இருந்தால் அதனை கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும்..” என பேசியிருக்கிறார்.
எச்சரிக்கை
ஆலோசகர் பேசும் பொழுது பாலை அடிக்கடி கொதிக்க வைத்து குடிக்கும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பாலை அதிகம் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரை, கேரமலைஸ் பாலின் சுவையை மேம்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
