பப்பாளி பழத்தோடு இதை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து: இனிமேல் இதை தவிர்த்திடுங்கள்
பொதுவாகவே நாம் சாப்பிடுவதற்கும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் ஏதாவது பழங்கள் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் சில பழங்களை சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதில் மிக முக்கியமானது தான் பப்பாளி பழம்.
பப்பாளி பழத்தில் அதிகளவான நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்திருக்கிறது. மேலும், பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் இயற்கையாகவே பல நோய்களில் இருந்து விடுபடலாம். அப்படி பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும் பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடவே கூடாது.
பப்பாளியுடன் சாப்பிடவே கூடாத உணவுகள்
பப்பாளி சாப்பிட்டவுடன் பால் மற்றும் பாலில் செய்த உணவுகளை சாப்பிடவே கூடாது. ஏனெனில் பால் மற்றும் பப்பாளியை சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல் வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும், பப்பாளி சாப்பிட்டு தயிர் சாப்பிட்டால் அது உடல் உபாதைகளையும், சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சினைகளையும் கொடுக்கும்.
பப்பாளி சாப்பிட்டவுடன் முட்டை சாப்பிடக் கூடாது ஏனெனில் அது உங்கள் உடல்நிலையை பாதிக்கும். பப்பாளியில் இருக்கும் வைட்டமின் சி முட்டையுடன் சேரும் போது வயிற்றில் குழப்பம் ஏற்பட்டு நீண்ட நாட்களுக்கு நோய்வாய்படும் படி ஆகிவிடும். மேலும், குமட்டல், மலச்சிக்கல், வாந்தி, அஜீரணம், வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
பப்பாளி சாப்பிட்டவுடன் எலுமிச்சை எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் இது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தி நச்சு கலவையாக உருவாக்கும். அதுமட்டுமில்லாமல் இரத்தசோகையை ஏற்படுத்தும் அதனால் எலுமிச்சையையும் பப்பாளி சாப்பிட்டவுடன் சாப்பிடக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |