பாலில் நெய் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
நாம் தினமும் அருந்தும் முக்கியமான உணவு பால். அதைப்போலவே நெய்யும் நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய உணவு. பால் மற்றும் இரண்டிலும் அநேக நன்மைகள் இருக்கின்றன.
இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும் என எப்போதாவது சிந்தித்ததுண்டா? அவ்வாறு சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் என்னென்ன தீமைகள் என்பது உங்களுக்கு தெரியுமா?
நெய்யில் அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் நெய்யில் உள்ள ஆன்டி பயோடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவ குணம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
பல நன்மைகளை கொண்டுள்ள நெய்யில் பாலை கலந்து குடித்தால் உடம்பில் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
பாலில் நெய் கலந்தால்.....
- நெய் பியூட்ரிக் அமிலத்தின் வளமான மூலமாகும். ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய்யை உறங்கும் போது உட்கொள்வது, மறுநாள் காலையில் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது
- மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதால், மூளைக்கு நெய் மிகவும் அவசியமாகின்றது.
- செரிமானப் பிரச்சினைகளை சீராக்கும்.
- பாலில் நெய் கலந்து குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் மேம்படுவதோடு உடலின் ஆற்றல் வலிமை அதிகரிக்கும்.
- இது அதிகப்படியான வேலையைச் செய்யத் தேவையான ஸ்டாமினாவை உடலுக்கு வழங்குகிறது. இதனால் உடல் சோர்வானது தடுக்கப்படும்.
- மூட்டு வலி உள்ளவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பாலில் நெய் கலந்து குடித்தால் மூட்டு வலி குணமாகும்.
- தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களும் இரவில் பாலில் நெய் சேர்த்து குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
- உடலை பளபளப்பாக்கவும் பொலிவுடனும் வைத்திருக்கும்
குறிப்பு: இந்தப் பலன்களை எல்லாம் பெற்றுக் கொள்ள சுத்தமான பசும் பால் மற்றும் சுத்தமான நெய் ஆகியவற்தை தான் நீங்கள் பயன்படுத்தவேண்டும்.