பழங்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம்...! இரவு வேளைகளில் சாப்பிட்டால் பிரச்சினையாம்
இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது.
ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது.
பொதுவாக பழங்களை சாப்பிட்டால் விரைவாக செரிமானம் ஆகும். ஏனெனில் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தினமும் பழங்கள் சாப்பிடுவதினால் நாம் மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.
அந்தவகையில் நாம் பழங்களை எவ்வாறு சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக பார்ப்போம்.
பழங்களை எவ்வாறு சாப்பிட வேண்டும்
1. பழங்களை வெட்டாமல் சாப்பிட வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட ஊட்டச்சத்து உடலுக்கு செல்லும்பொழுது பலதரப்பட்ட ஊட்டச்சத்துகள் நம் உடல் நிராகரித்து விடும்.
2. சாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில் அது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். அதனால் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் இரண்டுமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
3. பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது இன்னும் நல்லது. சூரியன் மறையும் நேரம் பழங்கள் சாப்பிடக்கூடாது.
4. பழங்களின் சீனி அதிகம் இருக்கும் அதனால் இரவு வேளைகளில் பழங்கள் சாப்பிடுவதால் நீரிழிவு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
5.காலைவேளையில் பழங்கள் சாப்பிடுவதால் பழத்தின் முழு பலன்களும் முழுமையாக எமக்கு கிடைக்கும்.
அந்தவகையில் மேலும் இது தொடர்பான் இன்னும் மேலதிக தகவல்களை தெரிந்துக்கொள்ள கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.