திடீரென அறுவை சிகிச்சையா? அப்படி என்ன பிரச்சினை பாவனிக்கு.. பதறும் ரசிகர்கள்!
சின்னத்திரை நடிகை பாவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை இடம்பெற்றதாகவும் வெளியாகிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, போன்ற சீரியல்களில் நடித்து பிரபல்யமாகியவர் தான் நடிகை பாவனி ரெட்டி.
இவர் லகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
மிகவும் பரபரப்பாக விளையாடிய பாவனி வயல் கார்டு என்றியில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அமிருடன் கிசுகிசுக்கப்பட்டார்.
கணவரை இழந்து இனி வாழவே வேண்டாம் என ஒடுங்கி இருந்த பாவனி, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மட்டும் அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.
காதல் திருமணம்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒன்றாக வேலைச் செய்யும் போது அமீரின் உண்மையான காதலை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இப்படியான ஒரு கட்டத்தில் இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.
திடீரென அறுவை சிகிச்சையா?
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனி சமீபத்தில் அமீருடன் பெட்ரூமிலிருந்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்னரே ஹனிமூனா? என கிண்டலாக பேசி வந்தார்கள்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் எப்படி இவருக்கு இந்த பிரச்சினை வந்தது என விரிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பாவனியின் ரசிகர்கள் பாவனிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |