விரைவில் திருமணம்! காதலர் தினத்தில் ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட அமீர், பாவனி
பிக்பாஸ் ஜோடிகளான பாவனி - அமிரின் திருமணம் விரைவில் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை பாவனி.
இதனை தொடர்ந்து 'சின்ன தம்பி' என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சீரியலை விட்டு திடீரென விலகினார்.
மேலும் பாவனியின் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் தன்னுடைய கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். சில பல காரணங்களால் பாவனியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மீடியாத்துறையிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 ல் ஒரு முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த அபிநய் - பாவனியை காதலிக்கிறார் என பல வதந்திகள் கிளம்பின.
இதற்கு ஒரு திருப்பு முனையை வைல்டு கார்டு என்றி கொடுத்தார் அமீர். இவர் பாவனியை காதலிப்பதாக பாவனி உட்பட அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார். இதற்கு பாவனி, “ என்னுடைய மனதில் என்னுடைய கணவர் இன்னும் இருக்கிறார்.” என கூறி அமிரை நிராகரித்தார்.
ஆங்கில மீடியவாவில் பாவனி கூறிய உண்மை
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீரும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றனர்.
பல முறை தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அமீரை ஒரு தடவை மனம் மாறி தன்னுடைய காதலைக் கூறி பாவனி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பில் ஒரு ஆங்கில மீடியாவொன்றில் பேட்டி கொடுத்துள்ளார்கள். அந்தப் பேட்டியில்,“அதில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததுமே அவரின் அன்பு, பாசத்தைப் பார்த்து காதலிக்கத் தொடங்கி விட்டேன். நாங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக அடிப்பட்டு வருகிறது, இதனை பார்த்த நெட்டிசன்கள்,“காதலர்கள் தினத்தில் இது என்ன டுவிஸ்ட், திருமணம் திகதி தொடர்பான தகவல் கூறுங்கள்” என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை தொடர்ந்து, காதலர்கள் தினமான இன்று காதல் பாடலுடன் இன்றைய நாளை தொடங்கியுள்ளார் பாவனி என்பதும் குறிப்பிடத்தக்கது.