பார்க்க 17 வயசு மாதிரி இருக்கும் பிக் பாஸ் பாவனியின் உண்மையான வயது என்ன தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்
சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கும் சின்னத்திரை நடிகை பாவனி ரெட்டி தற்போது தொடங்கி இருக்கும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவருக்கு முதல் நாளே ரசிகர்கள் ஆர்மி தொடங்கிவிட்டார்கள்.
அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது பற்றி பாவனி மிகவும் வெளிப்படையாக பேசி இருநதார்.
அதை பற்றி எல்லாம் அவர் பேசமாட்டார் என நினைத்தவர்களுக்கு அவர் பேசியது ஆச்சர்யத்தை கொடுத்தது. அதனால் சமூக வலைத்தளங்களில் அவருக்கு அதிகம் ஆதரவு குவிய தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸில் பாவனி தனது உண்மையான வயது என்ன என கூறி இருக்கிறார்.
சக போட்டியாளரான தாமரைச்செல்வி பாவனியிடம் வந்து அவர் பார்க்க 17 வயது பெண் போலவே இருப்பதாக கூறுகிறார். உன்னை பார்க்க 17 அல்லது 18 வயதாகும் பெண் போல் தான் இருக்கிறது என சொல்கிறார்.
அவருக்கு பாவனி தன் உண்மையான வயதை சொல்ல ஷாக் ஆகிறார். "எனக்கு 33 வயது ஆகிறது, வரும் நவம்பர் வந்தால் எனக்கு 34 வயது" என கூறுகிறார். "உங்களுக்கும் என் வயது தான் ஆகிறதா, ஆனால் பார்க்க சின்ன பெண் போலவே இருக்கீங்க" என ஆச்சர்யமாக பேசுகிறார் தாமரைச்செல்வி.