ஜிம்மில் இளைஞரொருவருக்கு நடந்த உருக்கமான சம்பவம்! திகைப்பில் சுற்றத்தார்...
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது இளைஞரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிம்மில் நடந்த சோகம்
தமிழ்நாட்டின் மதுரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ விஷ்ணு, (வயது 27) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரின் உடல் மிகவும் மெலிவாக இருந்ததால் தினமும் அப்பகுதியிலுள்ள ஜிம்மிற்கு செல்வது வழமை, குறித்த தினத்தன்றும் இவ்வாறு ஜிம்மிற்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து எப்போதும் போல் அதிக எடையை தூக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மரணத்திற்கான காரணம்
மேலும் அப்போது மருத்துவர் அதிர்ச்சியான தகவலொன்றை கூறியுள்ளார்.
“இவர் அதிகமான எடையை தூக்க முயற்சித்துள்ளார் இதனால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.