சாச்சனாவை காப்பாற்ற நடந்த சதி... சிவக்குமார் எலிமினேஷன்: மனைவி சுஜா வருணியின் வைரல் பதிவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக களமிறங்கிஜய சிவாஜியின் பேரன் சிவகுமார் எலிமினேட் செய்யப்பட்டமைக்கு எதிராக அவரின் மனைவி சுஜா வருணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 8
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமாகியது.
இந்த சீசன் மூலம் பிக்பாஸை தொகுத்து வழங்க களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி கேள்விக்கு கேள்வி, அதிரடிக்கு அதிரடி என தனது பாணியில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்தி வருகின்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஏழு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
அதே நேரத்தில் இந்த சீசனில் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். அதில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான சிவக்குமாரும் ஒருவர். சிவகுமார் சுஜா வருணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்க்கது.
பிக் பாஸ் 8ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவக்குமார். அவர் பிக்பாஸில் இருந்து நேற்றைய தினம் எலிமினேட் செய்யப்பட்டார்.
ஆனால் இது நியாயமான முறையில் இடம்பெறவில்லை என சிவகுமாரின் மனைவி சுஜா வருணி புகார் தெரிவித்துள்ளார்.
கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை விஜய் சேதுபதி காப்பாற்றிவிட்டார் என சுஜா வருணி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தற்போது குறித்த பதிவு வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |