திருமண நாள் நெருங்கும் வேளையில் ஹொட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்... குவியும் லைக்குகள்
நடிகை கீர்த்தி சுரேஷூக்கு இந்த மாதம் தனது 15 வருட காதலனுடன் திருமணம் இடம்பெறவுள்ள நிலையில், தற்போது அழகிய சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகின்றார்.
கீர்த்தி ஹிந்தியில் அறிமுகம் ஆகும் பேபி ஜான் திரைப்பம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
அது மட்டுமன்றி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வேளையில், டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டு அண்மையில் திருமணத்தை வதந்தியை உறுதிசெய்திருந்தார்.
டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |