எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறிய விக்னேஷ் சிவன் - காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்ததன் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார்.
விக்னேஷ் சிவன்
சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன்.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
உண்மையில் விக்னேஷ் சிவனின் வாழ்கையையே இந்த திரைப்படம் மாற்றியது எனலாம். காரணம் நானும் ரெளடி தான் திரைப்பமத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
பின்னர் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படத்தை இயக்கினார் விக்கி. இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது.
தனுஷ்- நயன்தாரா சர்ச்சை
நடிகர் தனுஷூக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.
திருமண ஆவணபடத்தில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு விக்கி மற்றும் நயன் இருவரும் இரண்டு வருடமாக கோரிக்கை வைத்தார்களாம்.
ஆனால் அதற்கான அனுமதி தனுஷ் தரவே இல்லை என்ற நிலையில், NOC இல்லாமலேயே அதை வீடியோவில் பயன்படுத்தினார்கள். அதற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.இந்த பிரச்சினை இணையத்தை உலுக்கியது.
இந்த பிரச்சினை நிலுவையில் இருக்க, விக்னேஷ் சிவன் எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்.
இந்த நிலையில், திடீரென தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தை டெலிட் செய்து அதிலிருந்து வெளியேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதற்கு காரணம் தனுஷுடனான பிரச்சனை மட்டுமின்றி, சமீபத்தில் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் பான் இந்தியா இயக்குனர்களை வைத்து ரவுண்டு டேபிள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார்.
பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் ஏன் கலந்துகொண்டார் என இணையதளவாசிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அவரை குரூப்புல டூப்பு என்றெல்லாம் தரக்குறைவாக விமர்சித்து கமெண்ட்கள் வந்தமையால் இவ்வாறு எக்ஸ் தளத்தில் இருந்து அறிவிப்பின்றி வெளியேறியிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
Vignesh Shivan deactivated his twitter account..!! pic.twitter.com/zJwMqpoqsi
— AB George (@AbGeorge_) November 30, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |