குருவின் மாற்றம்! கோடியில் புரளும் அதிர்ஷ்ட ராசி யார் தெரியுமா?
ஜோதிடத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சி, உதயம் மற்றும்அஜ்தமனம் இவைகளினால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களும் நிகழும்.
அந்த வகையில் ஏப்ரல் 27ல் நடக்கும் குரு உதயத்தினால் சிறப்பான பலன்களை சில ராசிக்காரர்கள் அடைய இருக்கின்றனர். குறித்த ராசிகளைக் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
குரு ஏப்ரல் 27-ம் தேதி மேஷ ராசியில் உதயமாகவுள்ளதால், அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் பல வெற்றிகளை அடைவதுடன், உத்தியோகத்திலும் பதவி உயர்வு ஏற்படும்.
கடகம்
மேஷ ராசியில் குரு உதயம் கடக ராசிக்காரர்களின் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், சம்பள உயர்வும் ஏற்படும். இந்த தருணத்தில் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் நிச்சயம் செய்யலாம். பல நன்மைகளை பெறும் உங்களுக்கு மரியாதையும் அதிகரிக்குமாம்.
சிம்மம்
இத்தருணத்தில் சிம்ம ராசிக்காரர்கள் அசாத்திய லாபத்தினை அடைவதுடன், சம்பள உயர்வுடன், பணி மாறுதல், இடமாற்றம் இவையும் ஏற்படலாம். வியாபாரத்தினை விரிவு படுத்தவோ அல்லது சொந்தமாகவோ தொடங்க நினைப்பவர்கள் இத்தருணத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
துலாம்
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
மகரம்
தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய வீட்டிற்கு மாறும் வாய்ப்பை பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், பணத்தினை சேமிப்பதிலும் அடுத்தடுத்து வெற்றியினை காண்பீர்கள்.
மீனம்
சுப பலன்களை பெறும் மீன ராசியினர், தொழில் மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவதுடன், பணலாபத்தினையும் அடைவார்கள்.