நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்?
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்யா ஷெட்டி.
90களில் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இருப்பினும் குறுகிய காலத்துக்குள் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
நிலையில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள பிட்காயின் மோசடியில் ராஜ் குந்தரா ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ. 97.79 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டில் வசிக்கும் பணக்காரர்களுக்கு விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிய ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்யமாட்டேன் என்றும் அவருடன் தான் வாழ்வேன் என நடிகை ஷில்பா ஷெட்டி அவரை வெளியே கொண்டு வர பெரும் முயற்சிகளை மேற்கொண்டு ஜாமினில் வெளியே கொண்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது எம்எல்எம் மூலமாக பிட் காயின் மோசடியில் ஈடுபட்டு சுமார் 150 கோடி ரூபாயை ராஜ் குந்த்ரா மோசடி செய்து சொத்துக்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமலாக்கத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் பின்னர் அவர்களின் சொத்துக்கள் முடுடக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |