அருமருந்தாகும் கடல் குதிரை.. அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
கடல் குதிரை பார்க்கும் பொழுது முகத்தோற்றம் குரங்கை போன்றும், கீழே வால் போன்ற ஒரு அமைப்பும் காணப்படும். பார்ப்பதற்கு வித்தியாசமான அமைப்பில் காணப்படும் கடல் குதிரைகள் மீன்கள் போன்று நீந்தாமல், மேல்நோக்கி நீந்தும்.
மாறுப்பட்ட தன்மை கொண்ட இந்த உயிரினத்தின் முதுகில் துடுப்புக்கள் உள்ளன. “இப்போகாம்பசு” என்ற அறிவியல் பெயர் கொண்ட கடல் குதிரைகள் வெப்பம் நிறைந்த கடல் பகுதியில் அதிகமாக வாழும்.
பார்ப்பதற்கு சிறியளவில் இருந்தாலும் புழு, பூச்சி, மீன் முட்டை போன்றவற்றை சாப்பிட்டு உயிர்வாழ்கின்றன. ஒரு கடல் குதிரை 5 ஆண்டு காலம் வரை உயிர்வாழும்.
இது போன்று கடல் குதிரைகள் பற்றி நீங்கள் அறியாத பல விடயங்களை எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் எதற்காக?

வழக்கமாக உயிரினங்களில் பெண் இனம் தான் இனப்பெருக்க வேலையை செய்யும். ஆனால் கடல் குதிரைகள் குறித்து பார்க்கும் பொழுது இயற்கைக்கு மாறுப்பட்டதாக இருக்கும். கடல் குதிரைகளில் பெண் கடல் குதிரை கருமுட்டைகளை ஆண் கடல் குதிரையின் வாலில் உள்ள கருவுக்குள் வைத்து விடும்.
இதனை ஆண் கடல்குதிரை ஆறு வாரங்கள் வரை வயிற்றுக்குள் வைத்து பாதுகாக்கும். அதன் பின்னர் ஒரே நேரத்தில் 100 குஞ்சுகளை பொறிக்கும். இவை அதிகப்பட்சமாக 6 முதல் 17 செமீ நீளம் வரை வளரும். 4 முதல் 14 கிராம் வரை எடையுடன் இருக்கும். தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கடல் தாவரங்கள் மற்றும் கடற்பஞ்சுகளின் மேல் மறைந்திருக்கும்.

மருந்தாகும் கடல்குதிரைகள்
கடல் குதிரைகளை பிடித்து ஆண்மை குறைப்பாட்டு பிரச்சினைக்கும் இன்னும் சில நோய்களுக்கும் மருந்து தயாரிக்கிறார்கள். அத்துடன் இயற்கை சீற்றம், மீனவர்கள் பிடிப்பு, கடத்தல்காரர்கள் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் கடற்குதிரைகளின் எண்ணிக்கை கடலில் குறைந்து வருகிறது.
இதனை பாதுகாக்கும் நோக்கில் கடல் குதிரைகளை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி வேட்டையாடப்பட்டால் மீன்வளத்துறை மற்றும் மெரைன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
