ரஜினி வீட்டிற்குள் இதெல்லாம் நடக்கிறதா? தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முக்கிய காரணம்
பிரபல நடிகரான தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர், குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துக்கூறியும் இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததுடன் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என சமூகவலைத்தளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன.
பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்துள்ள பேட்டியில், விவாகரத்துக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், பெரிய குடும்பத்தில் திருமணம் செய்தால் அந்த வீட்டில் மருமகன் அடிமையாகத்தான் இருக்க வேண்டும்.

ரஜினிகாந்த் குடும்பத்தினர் தனுஷ் குடும்பத்தினருக்கு போதியளவு மரியாதை கொடுக்கவில்லை, அவர்களை ஒழுங்காகவும் நடத்தவில்லை.
ரஜினி வீட்டுக்குள் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தது, ஒரு வித இடைவெளி இருக்கும், யார் யார் எந்த அறைக்குள் செல்ல வேண்டும் என்பதிலேயே கட்டுப்பாடுகள் இருக்கிறது.
அனைவராலும் அனைத்து அறைக்குள்ளும் சென்றுவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் மூத்த மகன் செல்வராகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததை போன்று இளைய மகன் தனுஷ்க்கும் 2வது திருமணம் செய்து வைப்பார்கள் தனுஷ் குடும்பத்தினர் என தெரிவித்துள்ளார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        