குளிர்காலத்தில் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது? இதை கட்டாயம் செய்திடுங்க
குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சரும வறட்சி இவற்றினை எவ்வாறு தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர்காலம்
குளிர்காலம் வந்துவிட்டாலே பல உடல்நல பிரச்சனைகள் வந்துவிடும். சளி, இருமல், காய்ச்சல், நுரையீரல் பிரச்சனைகள் வந்துவிடுகின்றது.
இதுமட்டுமின்றி சில தோல் பிரச்சனைகளும் வந்துவிடுகின்றது. சருமத்தில் அரிப்பு, வறட்சி ஏற்படுகின்றது. இதற்கு சில தீர்வுகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது?
வெயில் காலத்தினை குளிர்காலத்தில் சருமம் அதிகமாக வறட்சி அடைவதால், காலை மற்றும் மாலை வேளையில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். குளித்து வந்த உடன் ஈரம் காய்வதற்கு முன்பு மாய்ஸ்சரைசர் போட்டுக்கொள்ளவும்.
குளிர்காலத்தில் சோப்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. அதிக கெமிக்கல் இல்லாத சோப்பாக பயன்படுத்தவும்.


குளிர் காலத்தில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம் குறைவாக இருந்தாலும், குளிர்காலத்திலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும்.
குளிர்காலத்தில் வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து குறைவாக பெற முடியும் என்பதால், வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படும். இதனால் சருமத்தில் வறட்சி, அரிப்பு ஏற்படும். மருததுவரின் ஆலோசனையின் படி வைட்டமின் டி எடுத்துக்கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டுள்ளவற்றை தொடர்ந்து செய்தும் சருமத்தில் பிரச்சனை எனில் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |