பாகிஸ்தானில் இவர் பிச்சைகாரர், ஆனால் கோடிக்கணக்கில் சொத்து எப்படி வந்தது?
பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். யார் அந்த பணக்கார பிச்சைக்காரர்? அவர் மட்டும் இவ்வுளவு பணம் சம்பாதிக்க என்ன காரணம்? இதன் பின்னால் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
பிச்சைக்காரர்
பாகிஸ்தான் நாடு தற்போது பொருளாதார நீதியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது.
அந்நாட்டில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் கூட அதிக விலையை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் இவ்வுளவு பனவீக்கத்திற்கு மத்தியிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை நாட்டின் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைத்திருப்பதோடு அவர்களுக்கு ரூ.1 கோடி அளவிற்கு காப்பீடும் எடுத்துள்ளார்.
இவருடைய பெயர் ஷவுகத். பாகிஸ்தானின் பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரில் இவர் வசித்து வருகிறார். 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஷவுகத்தின் வங்கி கணக்கில் மட்டும் 1.7 மில்லியன் பணம் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் வரி வசூலிக்கும் நிறுவனமான ஃபெடரல் போர்டு ஆஃப் ரிவென்யூ (FBR) கூறியுள்ளது.
பிச்சையெடுப்பதின் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.1000 வரையாவது இவர் சம்பாதித்து விடுவதாக கூறப்படுகிறது. இவர் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தே பல கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளார்.
இதை பார்க்கும் போது அனைவரும் பிச்சை எடுத்தே வாழலாம் என யோகிக்க முடியாது. அது எல்லோருக்கும் பொருந்தாது. இது போன்ற சில நபர்களும் உலகில் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |