பூமியை போல தண்ணீரை கொண்ட இன்னுமொரு கோள்! தற்போது தண்ணீர் வற்றியதற்கான காரணம் என்ன?
பூமியை போல தண்ணீர் கொண்ட கோள் ஒன்றை ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த தண்ணீர் தற்போது ஆவி ஆகி விட்டது இதற்கான காரணத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.
பூமி கோள்
பூமியை தவிர மற்றைய கோளில் உயிர்கள் வாழ முடியுமா என்ற ஆய்வு செய்யும் போது செவ்வாய் கோளில் வாழலாம் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. செவ்வாய் மற்றும் நிலவில் தற்போது ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை தவிர வெள்ளி கோளில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் வெள்ளி கோளில் பூமியை போன்று தண்ணீர் இருந்தாலும் நாளடைவில் அங்கிருந்த தண்ணீர் அனைத்தும் ஆவி ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வீனஸ் கிரகம் உருவானபோது தண்ணீர் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு பின்னர் சூரிய மண்டலத்தில் பசுமை இல்ல விளைவை (Green House) வீனஸ் கிரகம் எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக அதன் மேற்பரப்பில் 900 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்ததால் அதிலிருந்து தண்ணீர் முழுவதும் ஆவி ஆகி உள்ளது. இதே போன்று மற்ற கிரகங்களில் நீர் இருந்ததா அப்படி இருந்தால் எவ்வாறு ஆவியானது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |