48 வயதில் கர்ப்பம்... கவுண்டமணியால் பாழாய் போன நடிகை ஷர்மிலியின் வாழ்க்கை
48 வயதில் முதல் குழந்தையை சுமக்கும் நடிகை ஷர்மிலி பேட்டி ஒன்றில் தன் சினிமா வாழ்க்கைப் பற்றியும், திருமண வாழ்க்கைப் பற்றியும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகை ஷர்மிலி
தமிழ் சினிமாவில் 90களில் காமெடி நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை ஷர்மிலி.
இவர் சினிமாவில் 13 வயதில் குருப் டான்ஸராக அறிமுகமானவர். நடிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
மேலும், சினிமாவில் மட்டும் கவுண்டமணியுடன் இணைந்து 27 படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் செந்தில், வடிவேலு, விவேக் எனப் பல முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்தவர்.
அதன் பிறகு பெரிதாக வாய்ப்புக் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
48 வயதில் கர்ப்பம்
ஆரம்பத்தில் திருணம் வேண்டாம் என்று சொல்லி வந்த ஷர்மிலி 40 வயதிற்குப் பிறகு தான் தனக்கு ஒரு ஆண் துணை வேண்டும் என்று எண்ணி ஐடியில் வேலை செய்யும் அரவிந்த் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது 48 வயதாகின்ற ஷர்மிலி நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். மேலும் தனக்கு எல்லாமே லேட்டாகத்தான் கிடைத்தது குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாழாப்போன சினிமா வாழ்க்கை
குறித்த பேட்டியில் கவுண்டமணியால் தான் தன் சினிமா வாழ்க்கை இல்லாமல் போனது என தெரிவித்திருத்தார். அதில் அவர் தொடர்ந்தும் தெரிவித்ததில்,
ஆரம்பத்தில் நடிக்கும் போது கவுண்டமணியுடன் தான் 27 படங்களில் நடித்து தான் பிரபலமானேன். பிரபலமானதும் ரஜினியின் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று என்னை புக் செய்திருந்தார்கள்.
ஆனால் அந்த வாய்ப்பை எனக்கு கிடைக்கவிடாமல் செய்து விட்டார் கவுண்டமணி. எப்போதும் அவரைக் கேட்டுத்தான் வேறு படங்களுக்கு புக் செய்ய வேண்டும் என்ற நிலைமையாகிவிட்டது.
இப்படியே போக முடியாது என்பதால் இனி கவுண்டமணியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் சொல்லி விட்டேன் இதனால் அவர் நான் நடிக்க இருந்த படங்களில் எல்லாம் என்னை நீக்கி விட்டார்.
அதற்குப் பிறகு எனக்கும் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது என் சினிமா வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார் என்று கூறியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |