திருநங்கை மனைவிக்காக முதல் குழந்தையை பெற்றெடுத்த கணவர்! அதிர்ந்து போன நெட்டிசன்கள்
கேரளாவில் திருமணம் செய்து கொண்ட திருநங்கை - திருநம்பி தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
மூன்றாம் பாலினத்தவரின் திருமணம்
கேரளாவின் கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியில் சஹத் - ஜியா என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், பெண்ணாக பிறந்த சஹத் ஆணாக மாற விரும்பினார்.
இருவரும் மூன்றாண்டுகளாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருநங்கை மனைவிக்காக குழந்தை சுமக்கும் கணவர்
இவர்களுக்கு நீண்ட நாளாக தங்களுக்கென்று குழந்தை பெற்றெடுக்க வேண்டுமென ஆசைப்பட்டுள்ளனர்.
இதற்காக மருத்துவ ஆலோசனைக்கு சென்ற போது, ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என மருத்துவர் கூறியிருக்கிறார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணவனாக இருக்கும் ஜியா கர்ப்பமாகியிருக்கிறார். மேலும் இந்த விடயத்தை சமீப தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் அறிவித்தனர்.
இந்திய வரலாற்றில் முதல் குழந்தை
இந்த நிலையில் இவர்களின் குழந்தை நேற்றைய தினம், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் தாயும் குழந்தையும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பாதாகவும் குழந்தையின் பாலினம் குறித்து என்ன விதமான தகவலும் வெளியிட போவதில்லையெனவும், அந்த குழந்தை வளரும் போது இந்த சமூகம் பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும் எனவும் தம்பதியினர் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து குழந்தைக்கான தாய்ப்பால், தாய்பால் வங்கியிருந்து மருத்துவமனை வாங்கிக் கொடுத்து வருகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ எல்லாம் இறைவன் செயல்” என தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.