புத்தகத்தில் இருப்பவைகளை கொண்டு மருத்துவம் செய்ய முடியாது! கொந்தளிக்கும் டாக்டர் ஷர்மிகா...நடந்தது என்ன?
சர்ச்சையில் சிக்கிய பின்னர் டாக்டர் ஷர்மிகா முதல் பதிவை வெளியிட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மருத்துவ குறிப்புக்கள்
சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் மருத்துவ குறிப்புக்களை கூறி வரும் டாக்டர் ஷர்மிகா மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.
இதன்படி, இவரின் வீடியோக்கள் இன்ஸ்டா பக்கங்கள் மற்றும் டுவிட்டர் பகுதிகளில் ட்ரோல் செய்யப்படுகிறது.
காரணம், இவரின் குறிப்புகளில் சில மருத்துவரீதியான பிழைகள் இருப்பதாக மருத்துவ சங்கத்தினர், இவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.
அதிரடி நடவடிக்கை
இது குறித்து கவனம் எடுத்த தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ இயக்குனர், இவர் தொடர்பில் யாராவது வழக்கு பதிவு செய்தால் நடவடிக்கை எடுப்போம் என அறிவித்திருந்தார்.
இதன்போது டாக்டர் ஷர்மிகா விளக்கமளிக்கையில், “நான் மக்களுக்கு சித்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கும் நோக்கத்தில் தான் பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் செய்து வருகிறேன்.
நான் சென்னையிலுள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பின்னர் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்த மருத்துவத்திற்கான கவுன்சிலில் பதிவும் செய்துள்ளேன்.
ரோல் செய்யப்பட்ட குறிப்புகளுக்கான விளக்கம்
மேலும் நான் படித்தவற்றை தான் வீடியோக்களில் கூறிவருகிறேன். இதனையடுத்து ஆட்டிறைச்சியால் ஏற்படும் நன்மைகளும் இதனால் குணமாகும் நோய்கள் குறித்தும் “நோயில்லா நெறி” என்ற புத்தகத்தில் இருந்தது.
அதிலுள்ள குறிப்பை வைத்து தான் ஆடு, மாடு இறைச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை சாப்பிட்டு சிலர் உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். அதனால் தான் சாப்பிடுவது நல்லதல்ல என கூறினேன்.
இதற்காக என்னை பாஜகவுடன் தொடர்புபடுத்தி ஏன் பேசுகீறிர்கள்? என்று கூறினார். மேலும் நான் குலாப் ஜாமுன் பற்றி சொன்னது மனிதனின் இயல்பு. அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறன்.
இது போல தான் நெய் விடயத்திலும் கூறினேன். புத்தகத்திலுள்ள விடயங்களை வைத்து மட்டும் மருத்துவம் பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்தால் அது மருத்துவமாக இருக்காது.
வைரலாகும் பதிவுகள்
இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை கொண்டு ரசிகர்களுக்கு பதிலளித்த ஷர்மிகாவிற்கு விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் புகாரின் அடிப்படையில் சுமார் 15 நாட்களுக்குக்குள் குறித்த மருத்துவ குறிப்புகளுக்கு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து டாக்டர் ஷர்மிகா எனக்கு எந்தவிதமான நோட்டீஸ் வரவில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் நோட்டீஸ் தற்போது கிடைத்து விட்டது போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘stay calm’ மற்றும் ‘நம்பிக்கையின் ஒரு கதிர்’என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவதுடன் இவரின் விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளும் படி இல்லையே என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவேற்றி வருகிறார்கள்.