பிக்பாஸ் குறித்து சர்ச்சையான கருத்து... விஜய் பக்கம் திரும்பிய சுச்சி பார்வை! என்ன கூறியிருக்கிறார்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனித்தன்மையான குரலுக்குச் சொந்தக்காரர் சுசித்ரா. இவரது பெயரைக் கேட்டாலே பிரபலங்கள் அலறும் அளவிற்கு அவர்களது உண்மை முகத்தினை புகைப்படமாக வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இவர் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து இரண்டு வாரங்கள் கூட அங்கிருக்க முடியாமல் வெளியேறினார்.
அவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சுசித்ரா கிராண்ட் பைனலில் மட்டும் பங்கேற்றார். அதன் பின்பு கமல் மற்றும் பிக்பாஸ் குறித்தும், வெற்றி பெற்ற ஆரி மீதும் அவதூறாக பல கருத்துக்களை வைத்தார். ஆதலால் பிக்பாஸில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களையும் அழைத்த பிரபல ரிவி சுசித்ராவை மட்டும் அழைக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது பிரபல ரிவியில் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலை பதிவிட்டு ‘கொஞ்சம் வெயிட் போட்டாலும் சிங்கம் சிங்கம் தான்லே ‘ என்று பதிவிட்டுள்ளார். அதே போல தளபதி Cute Max என்றும் பதிவிட்டுள்ளார் சுச்சி.