சமந்தாவின் வியாதிக்கு சிறந்த மருத்துவம்! எலும்பு தோலுமாக கையில் ருத்ராட்சம் மாலையுடன் உலாவும் பிரபலம்
நம்பியிருப்பவர்களுக்கு கலை தான் சிறந்த மருத்துவம் என நடிகை சமந்தா கருத்து வெளியிட்டுள்ளார்.
சினிமாவிற்கு அறிமுகம்
தமிழ் சினிமாவில் “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகாரத்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவரின் யதார்த்தமாகன நடிப்பால் பலகோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். மேலும் பல வெற்றிப்படங்கள் நடித்துள்ளார் என்பதால் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்களிலும் இவர் இருந்து வருகிறார்.
காதலித்து திருமணம்
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகவைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவரின் திருமண வாழ்க்கையின் பின்னர் சிறிதுக் காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
சில வாக்குவாதங்கள் காரணமாக திருமண வாழ்க்கையும் விவாகரத்து பெற்றது. இதனை தொடர்ந்து மயோசிடிஸ் என்கிற வித்தியாசமான நோயில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரின் திரைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இவர் சிகிச்சையில் இருந்துக் கொண்டே சில படங்களுக்கு டப்பிங் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறார்.
மேலும் இவர் தற்போது சிகிச்சையில் இருக்கும் போது ஏன் பணியில் ஈடுபடுகிறீர்கள் என பல கேள்விகள் எழுப்பபட்டிருந்தது.
சமந்தாவின் வைரலாகும் கருத்துக்கள்
இதன்படி சமந்தா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு சார்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த பைத்தியக்காரத்தனம், துக்கம், இழப்பு என அனைத்துக்கும் கலை தான் சிகிச்சை. அதன் மூலம் நான் குணம்பெற்று வீட்டுக்கு செல்வேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவின் கலையின் மீதுள்ள பற்றை பாராட்டியுள்ளார்கள். மேலும் இவர் மீண்டு வர பல பிராத்தனைகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.