ஆன்லைனில் ஏற்பட்ட சோகம்! உயிரை மாய்த்த கணவன் மனைவி... அனாதையாகிய குழந்தைகள்
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம்
சென்னை அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவரது மனைவி ஜெயந்தி (40). இந்த தம்பதிகளுக்கு பத்மஸ்ரீ(16), புனிதன்(14) என்று இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
முருகேசன் தனியார் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்து வந்ததுடன், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்கெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டும், மற்றொரு பகுதியில் இவர்களின் குடும்பத்தினர் அவ்வப்போது சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் முருகேசன் ஜெயந்தி இருவரும் அங்கு வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டிற்கு சென்ற அவர்கள் மறுநாள் காலை ஆகியும் தனது வீட்டிற்கு வராததால், முருகேசனின் தந்தை பகத்சிங் அவரது செல்லுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் போனை அவர்கள் எடுக்காததால், பக்கத்து வீட்டினருக்கு தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்க கூறியுள்ளனர். அப்பொழுது முருகேசன் ஜெயந்தி இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.
பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடன் பிரச்சினையில் இருந்து வந்ததும், அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.