உன் காதின் வடிவத்தை சொல் நீ யாரென்று சொல்கிறேன்.. சாஸ்திர தகவல்கள்!
மனிதர்களுக்கு இருக்கும் காதுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவம் இருக்கின்றது.
அவர்களுக்குள் இருக்கும் திறன்கள் மற்றும் ஆளுமைகளும் இதன்படி வேறுபடுகின்றது.
அந்த வகையில் பெரிய காதுகள் கொண்டவர்கள் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் மற்றும் சிறிய காதுகள் கொண்டவர்கள் பார்ப்பதற்கு கூச்சம் சுபாவம் போல் காட்டி கொள்வார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு வடிவத்திற்கு ஒரு விளக்கம் உள்ளது.
அந்த வகையில் எந்த காதிற்கு எப்படியான பண்புகள் உள்ளது என தொடர்ந்து பார்க்கலாம்.
1. பெரிய வடிவ காது
பெரிய காதுகள் கொண்டவர்கள் நிஜ வாழ்க்கையில் அமைதியாகவும் ஆராய்ந்து ஒரு விடயத்தை பேசுபவர்களாக இருப்பார்கள். அத்துடன் வேலையில் இருக்கும் போது நம்பிக்கை மற்றும் அதிகாரத்துடன் நடந்து கொள்வார்கள்.
நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிந்திருப்பார்கள். வாழ்க்கையில் என்ன பிரச்சினை வந்தாலும் லேசாக அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுவார்கள்.
2. சிறிய காது வடிவம்
சிறிய காதுகள் உள்ளவர்கள் இதற்கு அப்படியே மாறுப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பார்க்கும் போது கூச்சம் அதிகமாகவே இருக்கும்.
தனக்கென ஒரு குறுகிய வட்டமான தன் குடும்பம், தன் நெருங்கிய நண்பர்கள் என அவர்களிடம் மட்டும் நேரத்தை செலவிட விரும்புவார்கள்.
என்ன பிரச்சினை வந்தாலும் வெளியில் கூறமால் தனக்குள்ளேயே வைத்து புலம்பி கொள்வார்கள். தேவைக்காக பழகும் நபராக இருப்பார்கள்.
3. ஒட்டிய காது மடல்கள்
ஒட்டிய காதுகளை கொண்டவர்கள் பார்ப்பதற்கு அமைதி போல் இருப்பார்கள். இவர்கள் உணர்ச்சிவசத்தால் சில விடயங்களை செய்து மாட்டிக் கொள்வார்கள்.
பிரச்சினையான நேரங்களில் அமைதியாக செயல்பட்டு மீண்டும் வாழ்க்கையில் முன்னேற நினைப்பார்கள்.
4. கூர்மையான வெட்டுப்பட்ட காதுகள்
ஒருவருக்கு இது போன்ற காது அமைப்பு இருந்தால் அவர்கள் அதிக கற்பனைத் திறன் மற்றும் நடக்கப்போவதை முன்பே அறியும் உள்ளுணர்வு மன நிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
அது மட்டுமன்றி எல்லா விடயங்களையும் சாதாரணமாக பார்க்காமல் வித்தியாசமான பார்வையில் பார்ப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |