இரண்டு காதுகள், வால் அறுக்கப்பட்ட ரத்தவெள்ளத்தில் ஓடிவந்த பசுமாடு: கலங்க வைக்கும் புகைப்படம்
வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் இரண்டு காதுகளையும், வாலையும் அறுத்து சித்ரவதை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் ரவி, மன்மதன், சுபாஷ், கார்த்திக் என்கிற கொடூரர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான வயலில் குறித்த பசுமாடி மேய்ந்து வந்த நிலையில், அதனை வேறு பக்கம் திருப்பி விட்டாலும், உரிமையாளர்களிடம் கூறினாலும், மீண்டும் மீண்டும் இவர்களின் வயலில் மேய்ந்துள்ளது.
இதனால் ஆத்திரம் கொண்ட நான்கு பேரும் மாட்டைப் பிடித்து அரிவாளால் இரண்டு காதுகள் வெட்டியுள்ள நிலையில், வாலையும் அறுத்துள்ளனர்.
இதனை அவதானித்த சிலர் சிறிது நேரம் கட்டிவைத்துவிட்டு உரிமையாளரிடம் தவறினைக் கூறி ஒப்படையுங்கள் என்று கூறியதையும் கேட்காமல் இவ்வாறு செய்துள்ளனர்.
பசுமாடு அலறிக்கொண்டே ஓடிய இடமெல்லாம் ரத்தமாகவும், தான் வசிக்கும் மாட்டுதொழுவத்திற்கு சென்றுள்ளது. அங்கும் ரத்தகாடாக கிடந்ததை அவதானித்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்நடை மருத்துவர் நேரில் வந்து மாட்டிற்கு சிகிச்சை அளித்து வருகின்றார்.