இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள்

By Nivetha May 19, 2022 07:36 PM GMT
Nivetha

Nivetha

Report

 சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

இன்று ஏராளமானோருக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது. ஆனால் பலருக்கும் நமக்கு இருப்பது சைனஸ் என்று சரியாக தெரிவதில்லை.

அழகில் சமந்தாவை மிஞ்சும் அவரது அம்மா...முதல் முறையாக வெளியான கியூட் புகைப்படம்

பொதுவாக சைனஸ் பிரச்சனையை, சாதாரண சளி இருமல் என்று சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபத்தான சாதாரன அறிகுறி

சைனஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சளிக்கான அறிகுறிகள் என இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.

அதில் மூக்கடைப்பு, லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, மிகுதியான சோர்வு மற்றும் உடல்நலம் சரியில்லாதது போன்று உணர்வு இருக்கும்.

ஒருவருக்கு சாதாரண சளி என்றால், இதற்கான அறிகுறிகள் 3-5 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் ஒரு வாரத்திற்கும் மேல் ஒருவருக்கு சளி நீடித்திருந்தால், அவர்களுக்கு சைனஸ் தொற்றுகள் உள்ளது என்று அர்த்தம்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

சைனஸ் என்றால் என்ன?

மூக்கைச் சுற்றி பக்கத்திற்கு 4 என்று இரண்டு பக்கமும் சேர்த்து 8 காற்றுப்பைகள் உண்டு. கண்ணுக்கும் மூக்கும் இடைப்பட்ட கன்னம், மூக்கு, நெற்றி போன்றவை இணையும் இடத்தில் அமைந்திருக்கும் காற்றுபைகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுவாச மண்டலத்துக்கு எடுத்துசெல்லும் இந்த காற்றுபைகள் தான் சைனஸ் என்று அழைக்கிறோம்.  

சைனஸ் அறைகளில் ஏதாவது ஒரு அறையில் நீரோ சளியோ தங்கிய பிறகு அந்த அறைகளின் வாசல் அடைக்கப்படுகிறது.

இதுதான் சைனஸ் பாதிப்பு என்று சொல்லப்படுகிறது.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு சரியான வெப்பநிலையில் எடுத்டு செல்ல உதவுவது இந்த அறைகள் தான்.

​இரண்டு வகை சைனஸ் 

சைனஸ் பிரச்சனை இரண்டு வகைப்படும். ஒன்று குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். இது அக்யூட் ரியோ சைனஸைட்டீஸ் என்று அழைக்கப்படும்.

இந்த சைனஸ் பாதிப்பு 2 முதல் 3 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். இவை சைனஸ் தொந்தரவுகளை உருவாக்கி பிறகு படிப்படியாக குறைந்துவிடும்.

இவை வைரஸ் தொற்றால் உருவாகக்கூடியவை.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

மற்றொன்று க்ரானிக் ரியோ சைனஸைட்டீஸ் எனப்படும் இரண்டாவது வகை.

இவை 12 வாரங்கள் வரை நீடிக்ககூடியது. இவர்கள் தான் சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் என்று சொல்லகூடியவர்கள். இவர்களுக்கு எப்போதும் தூசு, புகை, பூ, காற்றில் மாசு போன்றவை அலர்ஜிதான்.

பொதுவான அறிகுறிகள் 

முகத்தில் வலி - சாதாரண சளிக்கும், சைனஸ் தொற்றிற்கும் உள்ள வேறுபாட்டை அறியும் ஒரு மிகச்சிறந்த வழி முகத்தில் வலியுடன், ஒருவித அழுத்தத்தை உணரக்கூடும்.

மூக்கைச் சுற்றிய பகுதிகளிலும், மேல் தாடை மற்றும் பற்கள், மற்றும் கண்களுக்கு இடையேயும் வலியை அனுபவிக்கக்கூடும்.

சைனஸ் சுரப்பிகளில் சளி தேங்குவதால் தான், முகத்தில் அழுத்தம் மற்றும் வலி ஏற்படுகிறது. சில சமயங்களில் சைனஸ் தொற்றுகள் தீவிரமாக இருக்கும் போது வலி இன்னும் கடுமையாக, தலையை சிறிது அசைத்தாலே வலியை சந்திக்கக்கூடும்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

மஞ்சள் நிற சளி -  சைனஸ் பிரச்சனையாக இருப்பின், மூக்கில் இருந்து சளி மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலேயோ வெளியேறும். இதேப் போன்று வாயின் வழியாகவும் சளி வெளியேறும். இதற்கு காரணம் சைனஸ் வைரஸ் தான்.

இம்மாதிரி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.  

கடுமையான இருமல் - இருமலானது நீண்ட நேரம் கடுமையாக இருந்தால், சைனஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குறிப்பாக இரவு நேரத்தில் இருமல் வருவதோடு, தூங்கும் நிலையும் சைனஸை பாதிக்கும். அதுவும் ஒருவர் மல்லாக்க படுக்கும் போது, நாசித்துளையில் உள்ள சளி அப்படியே மீண்டும் தொண்டைக்கு சென்றுவிடும்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ்

இதனால் தான் இரவு நேரத்தில் கடுமையான வறட்டு இருமலை சந்திக்க நேரிடுகிறது. இம்மாதிரியான நிலையில் தலையை சற்று உயரமாக வைத்துக் கொண்டு ஒரு பக்கமாக தூங்குங்கள். முக்கியமாக இந்த மாதிரியான சூழ்நிலையில் தவறாமல் மருத்துவரை அணுகுங்கள்.

வாய் துர்நாற்றம் - பொதுவாக வாய் துர்நாற்றத்திற்கான பாக்டீரியாக்கள் உள்நாகில் வளர்ச்சி பெறுகிறது. இதனால் தான் வாயினுள் துர்நாற்றம் வீசுகிறது.

சைனஸ் இருக்கும் போது, மூக்கைச் சுற்றி பாக்டீரியாக்கள் நிறைந்த சளி தேங்குவதால், அது கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதற்கு என்ன தான் வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள பற்களைத் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் நீங்காது. இத்தகையவர்கள் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க மருத்துவரைத் தான் அணுக வேண்டும்.

காது அடைப்பு - காதுகளுக்கும், சைனஸ் பிரச்சனைக்கும் தொடர் உள்ளது. சைனஸ் பிரச்சனை உள்ளவர்களு காது பிரச்சனைகள் வரும் அபாயம் அதிகரிக்கும்.

அதுவும் காது மடல் இருந்து வலி ஆரம்பித்து, பின் காதுகளுக்குள் வலியானது தீவிரமாக இருக்கும். ஆகவே உக்ளுக்கு காதுகளில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, உங்களது சைனஸ் பிரச்சனையைப் போக்குங்கள்.

 பல் வலி -  சைனஸ் இருந்தால், அடிக்கடி பல் வலியை சந்திக்கக்கூடும். சைனஸ் சுரப்பியில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படும் போது, தாடையின் மேல் பகுதியில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படும். இம்மாதிரியான தருணத்தில் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் சந்திக்கும் பிரச்சனையைக் கூறி, சைனஸில் இருந்து விடுபடுங்கள்.

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட சில இயற்கை வைத்தியங்கள்

சுடுநீர் ஒத்தடம்

கொதிக்க வைத்த சுடுநீரில் ஒரு துணியை நனைத்து அதிகப்படியான நீரைப் பிழிந்து, அந்த துணியை நெற்றி, மூக்கு, கண்கள் போன்ற இடங்களில் வைக்க வேண்டும்.

இப்படி 15 நிமிடத்திற்க ஒரு முறை என ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், மூக்கு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சைனஸ் சுரப்பியில் உள்ள அடைப்புக்களைத் திறந்து நிவாரணம் அளிக்கும்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

ஆவி பிடிக்கவும்

ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வையுங்கள். பின் அதில் சிறிது வேப்பிலை அல்லது வெந்தயத்தைப் போட்டு ஆவி பிடியுங்கள். இச்செயலால் சைனஸால் ஏற்படும் தலைவலி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

பூண்டு

பூண்டு சைனஸ் தொற்றுக்களில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத பொருளாகும். பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

எனவே சைனஸ் பிரச்சனை உள்ள ஒருவர் பூண்டு பற்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரைக் குடிக்கலாம் அல்லது பூண்டு கேப்ஸ்யூலை சாப்பிடலாம். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா? எச்சரிக்கை....உடனே இதை செய்யுங்கள் | Sinus Symptoms In Tamil

லெமன் பாம் மூலிகை

லெமன் பாம் இலைகளை நீரில் போட்டு கொரிக்க வைத்து, அந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.

இதனால் அதில் உள்ள மருத்துவ பண்புகள், சைனஸ் சுரப்பிகளில் உள்ள தொற்றுக்களை அழித்து, சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

அதோடு லெமன் பாம் இலை போட்டு கொதிக்க வைத்த நீரால், தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தாலும், சைனஸில் இருந்து விடுபடலாம்.

முக்கிய குறிப்பு 

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சைனஸ் பாதிப்பு உண்டாககூடும்.

இந்த நேரத்தில் மூக்கில் தூசி போகாமல் பார்த்துகொண்டாலே விரைவில் சரி செய்யமுடியும். அதே நேரம் உரிய சிகிச்சையும் செய்ய வேண்டும்.

இல்லையெனில் மூளைகாய்ச்சல் வரை கொண்டு செல்லவும் கூடும் என்பதால் உரிய நேரத்தில் தாமதமில்லாமல் சிகிச்சை செய்துகொள்வது அவசியம்.

தற்போது இதற்கு நவீன சிகிச்சைகள் வந்துவிட்டது என்பதால் மக்கள் பயப்படவேண்டியதில்லை.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US