தற்கொலைக்கு முயன்ற நடிகர் சாந்தனு....காரணம் இதுதானா?
பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு நடிப்பில் 'இராவண கோட்டம்' என்ற படம் தயாராகி வருகின்றது. இதில் இவருக்கு ஜோடியான கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
அந்த வகையில் இப் படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, இந் நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு பல விடயங்களை முன்வைத்தார்.
image - Times of india
"இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பாளரான கண்ணன் ரவி எனது தந்தையின் நண்பர் என்பதால் தயாரிப்பு பொறுப்புக்களை என்னிடம் கொடுத்திருந்தார். 30 நாட்களுக்கு ஒதுக்கிய பணத்தொகையானது 19 நாட்களிலேயே முடிந்துவிட்டது.
அதேபோல் படப்பிடிப்பிலும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டது. அதனால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்தது.
image - IndiaGlitz
பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இதன் வாயிலாக தெரிந்து கொண்டேன். உடன் நடிக்கும் சக நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள சம்மதித்தனர்.
இந்தப் படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன். எனது சினிமா பயணத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
image - pinterest