தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.. ஆனால்! வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ
சிங்கப்பூரில் 1992ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியொன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், நடிகர் ஆவதற்கு முன்பாக நான் ஆபீஸ்பாய், கார்பெண்டர், கூலி உள்ளிட்ட பல வேலைகளை செய்து வந்தேன்.
அதன்பின் தான் எனக்கு பேருந்தில் கண்டக்டர் வேலை கிடைத்தது, நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்.
வறுமையில் தான் வாழ்ந்து வந்தோம், அதனால் தான் எப்படியும் பணம் சம்பாதித்து பணக்காரர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன்.
இதற்காக பல வேலைகளை செய்தேன், ஆனால் நான் எதற்கும் பயப்பட்டது இல்லை, ஆனால் ஒருமுறை பயந்து விட்டேன்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன், அப்போதான் நான் இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த மலையில் ஒரு சாமியாரின் புகைப்படம் இருந்தது.
அதை பார்த்ததும் என்னுடைய மனம் நிம்மதி அடைந்ததால் வீட்டிற்கு சென்றுவிட்டேன், அங்கே தூங்கிக் கொண்டிருந்த போது என்னுடைய கனவில் தாடி வைத்த காவி உடை அணிந்த நபர் ஒருவர் ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கிறார்.
நான் அவரிடம் செல்ல ஆந்நில் நீந்தாமல் ஊடி செல்கிறேன். உடனே கண்விழித்து பார்த்தால் அந்த புகைப்படத்தில் இருந்தவர்தான் என் கனவில் வந்தவர் என்று எனக்கு புரிந்தது.
அதன்பிறகு தான் அவருடைய பெயர் கேட்டதற்கு ராகவேந்திரா என்று சொன்னார்கள். அப்போதிலிருந்து அவருக்காக விரதம் இருந்து பூஜை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.