சனியின் வக்கிர பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு அசுப பலன்கள்: எச்சரிக்கை
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி கிரகம், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர்.
2022ல் சனிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போது மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். பின்னர் 12 ஜூலை 2022 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார்.
சனி 12 ஜூலை 2022 அன்று திரும்பும் போது தனுசு, மிதுனம் மற்றும் துலாம் ராசிகளுக்கு மீண்டும் சனியின் கெடு பலன்கள் ஏற்படும். எனவே சனி பகவானால் எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
கும்ப ராசியில் செவ்வாய்-சனி சேர்க்கை
ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் தற்போது கும்ப ராசிக்கு மாறியுள்ளார். செவ்வாய் ஏற்கனவே இந்த ராசியில் அமைந்துள்ளது. இந்த வகையில் கும்பத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை உருவாகி வருகிறது. இந்த இணைப்பு மே 17 வரை நீடிக்கும்.
இதன் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிப்பார். சனி-செவ்வாய் ஒரே ராசியில் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இருந்தால் கெடுபலன்கள் ஏற்படலாம்.
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வன்முறை தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கலாம்.
மாறிவரும் வானிலை காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும். பங்குச் சந்தையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அண்டை நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும்.
நீங்க அதிகமாக டீ குடிக்கிறீங்களா? புற்றுநோய் ஏற்படும் ஜாக்கிரதை
இந்த 3 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்
சனி-செவ்வாய் கிரகங்களின் அசுப யோகத்தின் தாக்கம் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிகம் தெரியும். இந்த நபர்கள் எப்போதும் கோபமாக இருக்கலாம், இதன் காரணமாக அவர்களின் உறவுமுறை மோசமடையக்கூடும்.
தொழில், வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் கூடும். இந்த ராசிக்காரர்கள் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்படும். இந்த நபர்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் காயம் மற்றும் சுளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடல் எடையைக் குறைக்கும் கத்திரிக்காய்! விஷமாகவும் மாறும் ஜாக்கிரதை