சனி நட்சத்திர பெயர்ச்சி - இன்னும் ஒரு மாதத்தில் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்?
ஜோதிடத்தின்படி, சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் 12 ராசிகளில் சில ராசிகள் நன்மை பெறும் அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.
சனி நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை விட்டு இன்னுமொரு ராசிக்கு மாற்றமடையும். நவக்கிரகங்களில் தலைமை நீதிபதியாக கருதப்படுபவர் தான் சனி பகவான்.
இவரின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிக முக்கியம். அந்த வகையில் மார்ச் 21 ஆம் தேதி மாலை 4 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
இந்த சனி நட்சத்திர பெயர்ச்சி, நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் நன்மைகளை கொடுக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி பல நன்மைகளை கொடுக்கும். இவர்களின் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி, தொழிலிலும் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை மேம்பட்டு, பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்திலிருந்து வந்த சிறிய பிரச்சனைகள் தீரும், பழைய கடன்களை அடைபீர்கள். வேலை இல்லாதவர்கள் பங்குனி மாதத்தில் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், சனி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுககு சனிப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமாக இருக்கும். வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை திருமணம் நடக்காதவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வருமானங்கள் உங்களை தேடி வரும். இதனால் நீங்கள் அதிகளவாக சம்பாதிப்பீர்கள். தங்கள் உழைப்பிற்கு ஏற்ற வெற்றியை பெறுவீர்கள். பதவி உயர்வுக்கு வாய்ப்புள்ளது.
மகரம்
- சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது வீட்டில் நுழைவது மகர ராசிக்கு பல நல்ல பலன்களை கொடுக்கம். வாழ்க்கையில் எல்லா விதமான நன்மைகளும் உங்களை வந்து சேரும். வாகனங்கள், வீடு, சொத்து வாங்கும் வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு விடயத்தை நினைத்துக்கொண்டு இருந்தால் அது நிறைவெறும். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள். சிறிய பயணங்கள் போக நேரிடலாம். இதனால் உங்களுக்கு நன்மையும் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் பெயர்ச்சி மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு நன்மைகளை தரும்.இவர்கள் சோம்பேறிகள் கிடையாது. கடின உழைப்பாழிகள். இதற்கான பலன் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்விர்கள். உங்கள் நிண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வேலை கிடைத்து அதில் உங்களுக்கு பிடித்த வருமானத்தை ஈட்டுவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).