முதல்முறையாக தன் மகன் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டிய நடிகை
முதல்முறையாக வெளியுலகத்திற்கு தன் மகனின் முகத்தை காட்டிய நடிகை பூர்ணாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன் மகன் முகத்தை காட்டிய நடிகை பூர்ணா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூர்ணா. இவர் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘தகராறு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர மலையாள படங்களிலும் பூர்ணா நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் துபாயைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவரை நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டார். தற்போது பூர்ணா கணவரோடு துபாயில் வசித்து வருகிறார்.
இதன் பின்பு, கடந்த ஏப்ரல் மாதம் நடிகை பூர்ணாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், முதல்முறையாக நடிகை பூர்ணா தன்னுடைய அழகான மகனின் முகத்தை தன்னுடைய ரசிகர்களுக்கும், வெளியுலகத்திற்கும் காட்டியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா... என்ன அழகான குழந்தை.... மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.