திருமணம் முடிந்து 7 மாதங்களில் வளைகாப்பு! யார் அந்த பிரபலம்?
நடிகை பூர்ணா வளைகாப்பிற்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா.
இவரின் யதார்த்தமான நடிப்பாலும் வசிகரீக்கும் பார்வையாலும் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.
இவர் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் ரசிகர்களை கவர்ந்துடன் பல பாடல்களில் டாப் நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சிறிது காலத்தில் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இவர் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜீன் 12ம் திகதி திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டார்.
வளைகாப்பு புகைப்படங்கள்
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூர்ணா அவ்வப்போது அவரின் புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் சிறிது காலம் காணாமல் சென்று நல்ல செய்தியுடன் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
இதன்படி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பூர்ணா தன்னுடைய வளைகாப்புடன் புகைப்படங்களுடன் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அந்த பதிவில், “ "என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். என் குழந்தைக்கும் எனக்கும் நீங்கள் அளித்த ஆசீர்வாதத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி" என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள்“ இவர் திருமணம் முடித்து சில காலங்களே ஆன நிலையில் இவருக்கு எப்படி நிறை மாதக் கர்ப்பம் என சந்தேகித்து வருகிறார்கள்.