காயம்பட்ட மணிமேகலையை நேரில் சந்தித்த ஷகிலா மற்றும் மகள்; வைரலாகும் புகைப்பட பதிவு!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் மணிமேகலை கடந்த நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்கு மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இவருக்கு பலரும் ஆறுதல் கூறிவந்த நிலையில், தற்போது ஷகிலா மற்றும் அவரது மகள் மிலா இருவரும் மணிமேகலையை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் மணிமேகலை கூறும்போது, "ஷகிலா மம்மி லவ் யூ. நேரம் எடுத்து என்னை வந்து பார்த்ததற்காக நன்றி. மேலும் உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் மிகவும் அன்பானவர். இப்பொழுது சற்று நலமாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.