நடிகர் ஷாருக்கான் கையில் கட்டியுள்ள வாட்ச் இத்தனை கோடியா? நம்பமுடியாத அதிர்ச்சி
நடிகர் ஷாருக்கான் கையில் கட்டியுள்ள கடிகாரம் இணையத்தில் ட்ரெண்டாகி வருவதுடன் இதன் விலையைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான். இவர் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளைக் கடந்த நல்ல வரவேற்பை பெற்றதுடன், ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது.
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தீபிகா படுகோனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பதான் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி காரணமாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி நடந்த வெற்றி கொண்டாட்டத்திலும் ஷாருக்கான் நீல நிற வாட்ச் அணிந்து வந்திருந்த நிலையில், இவை ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவும் கவரப்பட்டிருந்தது.
மேலும் குறித்த வாட்ச்சின் விலையும் தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக ஏற்பட்டது. Audemars Piguet’s Royal Oak Perpetual Calendar என்ற பிராண்ட் கொண்ட அந்த வாட்சின் விலை ரூ.4.94 கோடி என்று தெரியவந்துள்ளது.
பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் ஜவான் மற்றும் டன்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் ஜூன் 2 ஆம் தேதி ஜவான் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.