மகாலட்சுமி ராஜயோகம் - கொத்தாக கோடீஷ்வர ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிகள்
செவ்வாய் மற்றும் சந்திர கிரகங்கள் சேர்ந்து மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றது.

மகாலட்சுமி ராஜயோகம
ஜோதிடத்தின்படி கிரகப்பெயர்ச்சிகள் ராசிகளுக்கு மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். மேலும் ஏப்ரல் 16 ஆம் தேதி மீன ராசிக்குள் சந்திரன் நுழைகிறார்.
இதனால் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நிகழ்ந்து மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும். இது 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ஆனாலும் சில ராசிகள் பெரும் இன்பத்தை கொடுக்கும் எனப்படுகின்றது. ஜோதிடத்தின்படி அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
- மிதுன ராசியில் 10 வது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நடக்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக முன்னேற்றமடைவார்கள். இதனால் நீங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றமடைவீர்கள். வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். கடின உழைப்பால் நல்ல பலன் பெறுவீர்கள்.
தனுசு
- தனுசு ராசியின் 4வது வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கிறது. இது தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லதை அள்ளி கொடுக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். இந்த காலகட்டத்தில் புது வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும்.
மீனம்
- மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை நடக்கிறது. இதனால் மீன ராசிக்காரர்கள் பெரும் நன்மை பெறுவார்கள்ர். புதிய வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியில் உங்கள் பணத்தை வாங்கி இதுவரை தராதவர்கள் தற்போது தருவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)