பருத்தி வீரன் திரைப்பட நடிகர் காலமானார்... சோகத்தில் திரையுலகினர்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தை திறந்தாலே திரைத்துறையினரில் பலரின் இறப்புச் செய்திதான் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று இன்னுமொரு நடிகர் நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் பருத்திவீரன்.
இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இத் திரைப்படத்தில் 'பொணந்தின்னி' என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், நடிகர் செவ்வாழை ராசு.
அதன்பின்பு பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 70 வயதாகும் இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால், மதுரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்க திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து என்ற கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.