நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பா? குடும்பத்தினர் கூறிய உண்மை
நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், இது வதந்தி என்றும் இதனை நம்ப வேண்டாம் என்று குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் சரத்பாபு
நடிகர் சரத்பாபு கடந்த 1971ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகமானார்.
ஆந்திராவில் பிறந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகராக வலம் வந்த நிலையில், 230க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அதிலும் ரஜினியுடன் முத்து, அண்ணாமலை படங்களில் நடித்தது தற்போது வரை ரசிகர்களால் பேசப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 71 வயதாகும் நடிகர் சரத்பாபு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இவரின், உடல் உறுப்புகள் பல செயலிழக்க தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
செப்சிஸ் என்பது அவ்வளவு கொடிய நோயா? இந்த நோயின் தாக்கத்தினை குறித்தும் அறிகுறிகளையும் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
செப்சிஸ் என்றால் என்ன?
இந்த செப்சிஸ் எனும் கொடிய நோயானது உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய நோயாகும். மனிதர்களின் உடலில் தொற்று நோய் பாதிப்பினை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தியை செயலிழக்க வைத்துவிடும்.
இந்த தொற்றுநோயை நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் போராடி சரிசெய்ய முடியாது. உடல் உறுப்புகளில் எதில் தொற்று ஏற்பட்டுள்ளதோ அதைப் பொறுத்து இதன் அறிகுறிகளும் மாறுபடும்.
இந்த வீரியமான தொற்றுக்கு நாம் வெளியிலிருந்து செலுத்தும் ஆன்டி பயாடிக் மருந்துகளாலும் கட்டுப்படுத்த முடியாது. இவை சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருந்தால், இரண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அடுத்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
அடுத்ததாக ரத்த அழுத்தம் குறைதல், நுரையீரல் பாதிக்கப்படுதல், இறுதியாக சுயநினைவினை இழத்தல் என்று செயல்படுகின்றது. ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் பிற உறுப்புகளை பாதிப்படைய வைப்பதே இந்த நோயின் தீவிரம் ஆகும்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பா?
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது உறவினர்கள் இதனை மறுத்துள்ளனர்.
நடிகர் சரத்பாபு உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், தற்போது வெளியாகியுள்ள தகவல் அனைத்தும் வதந்தி என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.