புதிய கார் வாங்கிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஸ்வாதி கொன்டே.
இவர் தற்போது புதிதாக கார் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கதடதில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
நடிகை ஸ்வாதி கொன்டே
கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட ஸ்வாதி, கன்னட திரைப்படங்களின் மூலம் சினிமா துறையில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தற்போது தமிழ் படங்களிலும் கமிட் ஆக ஆரம்பித்துள்ளார். அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது அப்பா-அம்மாவுடன் சென்று புதிய கார் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டு இறுதியாக என்னுடையது என பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |