கணவரை கை விட்ட ரக்சிதா - திடீரென கண்ணீருடன் வீடியோ வெளியிட என்ன காரணம்?
கணவரை பிரிந்து அம்மாவுடன் இருந்து வரும் ரக்சிதா கண்ணீருடன் வீடியோயொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
ரக்சிதா மகாலட்சுமி
சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரக்சிதா மகாலட்சுமி.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.
சீரியல்களில் நடிக்கும் போது நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்து சீரியல்களில் நடித்து வந்தார்கள்.
இதனை தொடர்ந்து கணவரை பிரிந்த ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் தினேஷ் பலத்த ஆதரவை வழங்கினார். வெளியில் வந்ததும் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
மாறாக வெளியில் வந்த பின்னர் பிரச்சினை அதிகமாகி விவாகரத்து கேட்டு பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. ர்க்சிதா இதற்கெல்லாம் மறைமுகமாக பதிலடிக் கொடுத்து வந்தார்.
கண்ணீருடன் வெளியாகிய பதிவு
அதற்கு மத்தியில் ரக்சிதா தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
அந்த வகையில் ரக்சிதா கடந்த காலங்களில் கடந்து வந்த கடினமான பாதைகள் எவ்வாறு இருந்தது. எனக்கூறும் வகையில் ஒரு பாடலுக்கு கண்ணீருடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் ரக்சிதாவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்.“ கடந்த காலங்களை நினைத்து வருத்தம் கொள்ளாதீர்கள்..” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |