ராபர்ட் காதலி கூறியது என்ன? ரச்சிதா அளித்த பதில்! கொளுத்தி போட்ட பிரியங்கா
பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ரச்சிதாவை பிரியங்கா கொடுத்த கலாய் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியல் சுமார் 106 நாட்கள் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த சீசனில் அசீம் உள்ளே போட்டியாளர்களின் வெறுப்பினை சம்பாதித்து, வெளியே மக்களின் மனதைக் கவர்ந்து டைட்டில் வின்னராகவும் ஆனார்.
மிகவும் மகிழ்ச்சியாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் அனைத்து பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ரச்சிதாவைக் கலாய்த்த பிரியங்கா
இந்த பிக்பாஸ் சீசனில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதாவின் காதல் காட்சிகள் அருமையாக சென்றது. ஆம் உள்ளே ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவைக் காதலிப்பதாக கூறி பின்னே சுற்றி சுற்றி வந்துள்ளார். ஆனால் ரச்சிதாவே அவரை கண்டுகொள்ளவே இல்லை.
பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அப்போது ரச்சிதா எடுத்த கேள்வியில், "கோபிநாத் அண்ணா சொல்றது மாதிரி இப்படி ஒரு விஷயத்தை இவர் பண்ணதுனால இவர் எனக்கு காவியமா தெரியுறாருன்னா யாரு?" என்ற கேள்வி வந்துள்ளது.
இந்த கேள்விக்கு அனைத்து போட்டியாளர்களும் நகைச்சுவையாக ராபர்ட் மாஸ்டர் என்ற பெயரைக் கூறிய நிலையில், ரச்சிதா அதற்கு மறுப்பு தெரிவித்து விக்ரமன் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் மரியாதை கொடுத்து பேசியதால் அவர் காவியமாக தெரிவதாக தன்னுடைய விளக்கத்தையும் ரச்சிதா கொடுத்திருந்தார். "நீ இப்படி பேசும் போது ஷார்ட் ஃபுல்லா மாஸ்டர் மேலயே இருக்கும்" என பிரியங்காவும் கலாய்த்து பேசினார்.
இதேபோல ராபர்ட் மாஸ்டருக்கு வந்த கேள்வியில், "எந்த சூழ்நிலையிலும் பிக் பாஸ் வீட்டுக்குள் இதை மட்டும் பண்ணிட கூடாதுன்னு நினைச்சு போனேன். ஆனா அத பண்ணிட்டேனே" என நினைக்கும் விஷயத்தை கூற வேண்டும் என இருக்கிறது.
இதற்கு ராபர்ட் மாஸ்டர் இந்த விடயம் தான் உள்ளே இருக்கும் அனைவருக்கே தெரியுமே... என் காதலி வெளியே கூறிதான் அனுப்பிவிட்டார்... ஆனால் அதை மட்டும் தான் செய்தேன்... என்று கூறியிருந்த தருணத்தில் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் என்ற பாடலை போட்டுக்காட்டி கலாய்த்துள்ளனர்.