கணவருடன் மீண்டும் இணையும் ரச்சிதா! பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின்பு நடந்தது என்ன?
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சிதா மகாலட்சுமிக்கு அவரின் கணவர் தினேஷ் இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரச்சிதாவின் ஆட்டம் பிக் பாஸில் சூடுபிடித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் அதிலுள்ள முக்கிய போட்டியாளர்களில் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர்.
ரச்சிதா மகாலட்சுமி பெங்களூரை சேர்ந்தவர் இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “பிரிவோம் சந்திப்போம் சீரியல்” மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.
திருமணம்
இதனையடுத்து இந்த தொடரில் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னரும் “நாச்சியார்புரம்” என்ற தொடரில் இணைந்து நடித்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் சில தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்துப் பெற்று தனித்து வாழ்ந்து வருகிறார்கள் இதுமட்டுமின்றி அவரது சின்னத்திரை பயணமும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்துள்ளார்.
இன்ஸ்டா பதிவு
மேலும் பிக் பாஸ் வீடு செல்லும் முன்பு ரச்சிதா கொடுத்த பேட்டியில் கூட கணவர் பற்றி எந்த தகவலும் கூறவில்லை. ஆனால் தினேஷ் ரச்சிதாவிற்கு இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.
