விவாகரத்து ரகசியத்தை உடைத்த ரச்சிதா கணவர்! பிரச்சனை இருக்கு...இரண்டாவது திருமணம் உண்மையா?
சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டதாக பரவிவரும் தகவலுக்கு நடிகர் தினேஷ் விளக்கம் கொடுத்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தார்.
விதவைப் பெண்ணாக நடிக்கும் ரச்சிதா
ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட திணேஸை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தது.
சட்டப்படி பிரிய வில்லை
இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்று பேட்டி அளித்துள்ள தினேஷ்,
அனைவரின் குடும்ப வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும் அப்படித்தான் எனக்கும் ரச்சிதாவிற்கும் இடையே சில பிரச்சனை இருக்கு.
இது காலபோக்கில் சரியாகிவிடும். காலம் அனைத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன்.
ரச்சிதா இரண்டாவது திருமணம் குறித்து பேசிய தினேஷ், வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா? அப்படித்தான் ரச்சிதாவை பற்றி பேசி வருகிறார்கள்.
நானும் ரச்சிதாவும் இதுவரை சட்டப்படி பிரியவேண்டும் என்று நினைக்கவில்லை என்று நடிகர் தினேஷ் கூறினார்.