40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த நடிகை
தென்றல், ஆபீஸ் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தவர்தான் நடிகை ஸ்ருதி ராஜ். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் மலையாளத்தில் இருந்து அறிமுகமாகி தமிழில் பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் மாண்பு மிகு மாணவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அண்மையில் பகிர்ந்துள்ளார். அதாவது அவரது வாழ்க்கையில் எந்த விடயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாதாம்.
ஏனென்றால் அப்படி திட்டமிட்டு செய்த எதுவும் சரியாக நடப்பதும் இல்லை. அதனால்தான் திருமணம் குறித்து எதையும் பெரிதாக யோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அவரது திருமணம் பற்றி வீட்டிலுள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும், அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 40 வயதைக் கடந்தாலும் கூட இன்னும் அவரது அழகில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.