இனி நடிக்கவே கூடாது.. கண்டிஷன் போட்ட கணவர் - எதிர்நீச்சல் ஜான்சி ராணி எமோஷனல் ஸ்பீச்..!
எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான்சிராணியை அவரது கணவர் இனி நடிக்க வேண்டாம் எனக்கூறி விட்டார் என பேட்டியில் பேசியுள்ளார்.
காயத்ரி கிருஷ்ணன்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் ஒரே கதாபாத்திரம் ஜான்சி ராணி.
இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.
சீரியல் மட்டுமல்லாது இவர் வெள்ளத்திரையிலும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
என்னை என் கணவர் நடிக்க அனுமதிக்கவில்லை..
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “ தான் இந்த இடத்தில் இருந்து பேசுவதற்கு என்னுடைய மாமியாரும் மாப்பிள்ளையும் தான் காரணம். என்னை முதலில் என் கணவர் நடிப்பதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால் காலங்கள் செல்ல செல்ல இன்று என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இவர் பேசிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள்,“ அப்படி அன்று இருந்திருந்தால் இப்படியொரு ஜான்சி கிடைக்குமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |