அம்மாவாக பின்னரும் இப்படியா? மகனுடன் ரகளை செய்யும் சீரியல் நடிகை ஃபரினா!
பிரபல சீரியல் நடிகை ஃபரினா ஆசாத் தனது மகனுடன் செம கியூட்டாக சகளை செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சீரியல் நடிகை ஃபரினா ஆசாத்
தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி சீரியல் நடிகையாக வலம் வந்தவர் தான் பரீனா ஆசாத். பிரியாத வரம வேண்டும் என்ற சீரியலில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் ஒரு நடிகையாக மக்கள் மனதில் அவர் நின்றார் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தான். பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
தனது எதார்த்தமான நடிப்பில் அசத்திய வெண்பாவை, இல்லத்தரசிகள் அனைவரும் திட்டித் தீர்த்தாலும், இவரின் கதாப்பாத்திரம் இன்றும் யாராலும் மறக்க முடியதாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.

சீரியலில் பீக்கில் இருக்கும் போதே ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனாவுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் இருக்கின்றது.
ஆனால் இவர் ஒரு குழந்தைக்கு தாய் என்று சொன்னால் யாராலும் நம்பவே முடியாது. அந்தளவுக்கு இளமையாக தோற்றமளிக்கின்றார்.

இந்நிலையில், தற்போது தனது மகனுடன் விளையாட்டாக சேட்டை செய்து, தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |