பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
பொதுவாக நம்மிள் பலரும் வெள்ளையாக வேண்டும் என்ற முயற்சியில் பலவிதமான முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
இவ்வளவு நாட்களாக ப்யூட்டி பாலர்கள், வீட்டிலுள்ள மஞ்சள், பால், கடலை மா ஆகிய பொருட்களை கொண்டு தான் பேஸ் பேக்களை போட்டு வந்தார்கள். மாறாக சமீப காலமாக மாதவிடாயில் ஃபேஸ் மாஸ் போடுவது வைரலாகி வருகின்றது.
இது குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தாலும், பிரபலங்கள் பயன்படுத்தும் காணொளி வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இது குறித்த பகிர்ந்து ஒரு பயனர், மாதவிடாய் இரத்தம் பெண்களின் கழிவுகள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் பொழுது ரத்தத்தில் உள்ள அனைத்து செல்களும் இல்லாமல் போய் விடும். அப்படி இருக்கும் ஒரு கழிவு ரத்தம் எப்படி முகத்திற்கு அழகை கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதே போன்று மறுப்பக்கம், மாதவிடாய் ரத்தம் சேர்ந்து தான் ஒரு குழந்தைக்கு தேவையான அனைத்து ஸ்டெம் செல்களையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. ஆகையால் இது நிச்சயம் உங்களுடைய முகத்திற்கு புதுபொலிவு கிடைக்கும்..” எனக் கூறியுள்ளனர்.
அப்படியாயின், மாதவிடாய் ரத்தம் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுவது உண்மைதானா? அதற்கு தோல் மருத்துவர்களின் விளக்கம் என்ன? என்பதையும் பதிவில் பார்க்கலாம்.

மாதவிடாய் இரத்தம் Face pack
மாதவிடாய் இரத்தம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனை பயன்படுத்தும் பெண்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இந்த ரத்தம் வழங்குகிறது அத்துடன் முகப்பரு பிரச்சினையுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கிறது. ஆனால் இதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.
மாதவிடாய் இரத்தம், இறந்த சரும செல்கள் மற்றும் எண்டோமைசியம் (endomysium) எனப்படும் இறந்த உள் புறணி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தொற்றுக்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

சருமத்தை சேதப்படுத்தும் பாக்டீரியா
அறுவை சிகிச்சை மருத்துவர் கொடுத்த ஆலோசனையில், “ மாதவிடாய் இரத்தம், இரத்த எண்டோமெட்ரியல் திசு, கர்ப்பப்பை வாய் மற்றும் பிறப்புறுப்பு சுரப்புகளையும் கொண்டிருக்கும்.
நம்மிள் பல பெண்களுக்கு யோனி மற்றும் கர்ப்பப்பை வாய் தொற்று மற்றும் எண்டோமெட்ரிடிஸ் (endometritis) எனப்படும் எண்டோமெட்ரியல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படியானவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் திரவத்துடன் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வெளியேறும்.
இது உங்களின் சரும அழகையே கெடுத்து விடும் ரத்தத்தை அழகிற்காக பயன்படுத்துவது தவறு என எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |